முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

30 மில்லியன் மக்கள் இறக்கும் அபாயம்! வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த நூற்றாண்டின் இறுதியில் காலநிலை மாற்றத்தினால் 30 மில்லியன் மக்கள் உயிரிழக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி தலைமையிலான ஒரு புதிய ஆய்வில் இந்த தகவல் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு சென்று பேரழிவு பாதையை அடையும் என ஐ.நா எச்சரித்தது.இதனை தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

30 மில்லியன் மக்கள்

இந்த பகுப்பாய்வில் காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாட்டின் காரணமாக, இந்த நூற்றாண்டின் இறுதியில் 30 மில்லியன் மக்கள் அழிந்து போகக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

30 மில்லியன் மக்கள் இறக்கும் அபாயம்! வெளியான அதிர்ச்சி தகவல் | Climate Change 30 Million Peoples Risk Prediction

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கணக்கீடுகளை 2000 முதல் 2090 வரையிலான கணிப்புகளின் அடிப்படையில், 10 ஆண்டு இடைவெளியில் பகுப்பாய்வு செய்தனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இறப்புகளில் குறிப்பிடத்தக்க பிராந்திய வேறுபாடுகள் இருக்கும் என்று அவர்களின் பகுப்பாய்வு காட்டுகிறது.

காற்று மாசுபாடு காரணமாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மிக மோசமாக பாதிக்கப்படும் என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கு ஐரோப்பா (Europe), வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா (Australia) மற்றும் ஆசியா பசிபிக் போன்ற அதிக வருமானம் கொண்ட பகுதிகளில், தீவிர வெப்பநிலை தொடர்பான இறப்புகள் காற்று மாசுபட்டால் ஏற்படும் இறப்புகள் அதிகமாகவாம் என கூறப்படுகின்றது.

தீவிர வெப்பநிலை

நிபுணர்களின் கணிப்பின்படி, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா (போலந்து மற்றும் ருமேனியா) மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் (அர்ஜென்டினா மற்றும் சிலி) காற்று மாசுபாட்டை விட, தீவிர வெப்பநிலை மிகவும் அபாயமாக மாறும்.

30 மில்லியன் மக்கள் இறக்கும் அபாயம்! வெளியான அதிர்ச்சி தகவல் | Climate Change 30 Million Peoples Risk Prediction

ஆராய்ச்சி குழு தலைவர் வைத்தியர் ஆண்ட்ரியா போஸர் கூறும்போது, “2000ஆம் ஆண்டில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் மக்கள் குளிர் மற்றும் வெப்பம் காரணமாக தீவிர வெப்பநிலை காரணமாக இறந்துள்ளனர்” என்றார்.

2100ஆம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் 5யில் ஒரு பகுதியினருக்கு காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையதை விட, வெப்பநிலை தொடர்பான உடல்நல அபாயங்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.