முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டு ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக பொருளாதார தடை: ட்ரம்ப் அதிரடி

கொலம்பிய (Colombia) ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா (United States) பொருளாதார தடை விதித்துள்ளது.

உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டது.

தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா மற்றும் வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார்.

தடுக்கும் நடவடிக்கை

அத்தோடு, போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என தெரிவித்து கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது.

வெளிநாட்டு ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக பொருளாதார தடை: ட்ரம்ப் அதிரடி | Colombian President Family Hit By Us Sanctions

இதனுடன், கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

அத்தோடு, கொலம்பிய நாட்டு வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு

அமெரிக்காவில் இருந்து பெரிய அளவிலான உதவிகள் மற்றும் மானியங்கள் கிடைத்தும் கொலம்பியா ஜனாதிபதி அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என தெரிவித்து அந்நாட்டிற்கான உதவிகளையும் குறைத்தார்.

வெளிநாட்டு ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக பொருளாதார தடை: ட்ரம்ப் அதிரடி | Colombian President Family Hit By Us Sanctions

மேலும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் 30 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக கொலம்பியாவையும் டொனால்ட் ட்ரம்ப் சேர்த்துள்ளார்.

இந்தநிலையில் தீவிர போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என தெரிவித்து கொலம்பிய ஜனாதிபதி, மனைவி, மகன் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்