முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு மாநகர சபையின் ஆட்சிபீடம்! சஜித்துக்கு பெரும் சவால்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பல்வேறு தலைவர்களின் அறிக்கைகளுக்கும் கட்சியின் உள் செயல்பாடுகளுக்கும் இடையில் ஒரு அரசியல் நாடகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மற்ற சிறிய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக தொடர்ந்தும் கூறி வருகிறார்.

இருப்பினும், அந்தத் தலைமை தனது சொந்தக் கட்சிக் குழுக்களைக் கூடப் பாதுகாக்கத் தவறிவிட்டது என சில விமர்சகர்களின் கருத்துக்கள் அமையப்பெற்றுள்ளன.

கட்சி கூட்டணி 

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் நிறுவப்படும் என்றும் அவர் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் ஆட்சிபீடம்! சஜித்துக்கு பெரும் சவால் | Colombo Mc Governance Challenges Sajith

இந்த கருத்தை அடிப்படையாக கொண்டே மேற்படி விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

ஒருபுறம் கட்சி கூட்டணி தொடர்பில் கூறிவருவதாகவும், மறுபுறம் கட்சியின் சொந்தக் குழுக்களை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 கொழும்பு மாநகரசபை

இந்நிலையில் கொழும்பு மாநகரசபையின் ஆட்சி தொடர்பில் மத்துமபண்டார தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.

கொழும்பு மாநகர சபையின் ஆட்சிபீடம்! சஜித்துக்கு பெரும் சவால் | Colombo Mc Governance Challenges Sajith

“கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

கொழும்பு மேயர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்.

கொழும்பு மாநகர சபையின் பெரும்பான்மை எதிர்க்கட்சிக்கு இல்லை.

எனினம் அனைத்து எதிர்க்கட்சி குழுக்களும் ஒன்றிணைந்து இந்த சபையை உருவாக்கும்.

ஒன்று அல்லது இரண்டு சுயேட்சை குழுக்களுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளது.

அரசாங்கத்தின் வாக்குகள் 2.3 மில்லியன் குறைந்துள்ளன.

மாகாண சபைத் தேர்தல்கள் நடந்தால், இன்னும் 2 மில்லியன் குறைந்துவிடும், அவ்வளவுதான்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்