தேசிய மக்கள் சக்தி இரகசிய வாக்கெடுப்பை நடத்தி மேற்கொண்ட அரசியல் நாடகத்தை ஆறு மாதத்தில் முடிவுக்கு கொண்டுவர முடிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பு மாநாகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பாதீட்டை தோற்கடித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சி
மேலும் கருத்து தெரிவித்த அவர், “இப்போது கொழும்பை ஆட்சி செய்வது ஒன்றிணைந்த எதிர்கட்சியின் குழுவே.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான கொழும்பு மாநகர சபையின் வாக்கெடுப்பு நேற்று (22.12.2025) இடம்பெற்றது.
குறித்த வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

