முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் அரச காணியில் அமைந்துள்ள தனியார் ஊடக நிறுவனம் : அரச தரப்பு எம்.பி பகிரங்கம்

கொழும்பில் பிரதான தனியார் ஊடக நிறுவனம் ஒன்று மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் காணியில் அமைந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.

இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், ”மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான காணி மிக குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை நாம் சொல்வதால் எமக்கு எதிராகவும் குறித்த ஊடக நிறுவனம் பிரசாரம் செய்யக் கூடும்.

கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்டது

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கான கேள்விப்பரத்திரக் கோரல் குழு ஒன்று நியமிக்கப்படவில்லை என்பதால் நாம், குறித்த குத்தகை வழங்கலை இரத்துச் செய்தோம்.

அப்போது குறித்த ஒரு ஊடகத்தில் ஏன் நிறுத்தினீர்கள்? அமைச்சரின் நெருங்கியவர்களுக்கு வழங்குவதற்காகவா என்று பொய்ப்பிரசாரங்கள் செய்கின்றனர்.

கொழும்பில் அரச காணியில் அமைந்துள்ள தனியார் ஊடக நிறுவனம் : அரச தரப்பு எம்.பி பகிரங்கம் | Colombo Private Media Company Set Up On Govt Land

இந்த பத்திரிகை விளம்பரம் சட்டத்திட்டங்களுக்கு முரணானதால் நிறுத்தினோம். இவை மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளாகும்.
கொழும்பில் உள்ள காணிகளில் வியாபார நடவடிக்கைகள் நடைபெறுதென்றால் நாம் அதை குழப்புவதற்கு தயாரில்லை.

அரச காணிகள் பெருவாரியாக வைத்துக் கொண்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால்,அது பலனற்ற காரியமாகும்.
ஆனால் அந்த காணிகளுக்கான சாதாரண வரிக்கட்டணத்தை செலுத்தியே பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதனால் ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படுவதோடு புதிய விலை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
உண்மை என்வென்றால், தனது நெருக்கமானவர்களுக்கு குறைந்த விலையில் காணிகளை வழங்கி கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.