Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு கட்சிகளால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளால் வாக்காளர்கள் பாதிக்கப்படக்கூடாது என தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது.
இந்த கணக்கெடுப்புகளின் அடிப்படையில் வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கணிப்புக்கள்
இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புக்களின் கருத்துக்கணிப்புக்கள் என்று கூறப்படும் போலியான கருத்துக்கணிப்புகளும் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வாக்காளர்கள் தங்கள் தேர்தல் முடிவுகளை எடுக்கும்போது நம்பகமான தகவல்களில் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.