அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஒரு குழுவை நியமித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் நேற்றையதினம் (04) இலங்கைப் பொருட்களுக்கு 44 வீத பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார்.
புதிய வரிகள்
குறித்த நடடிக்கையைானது, அமெரிக்கா மீது இலங்கை விதித்த 88 சதவீத வரிகள் மற்றும் வர்த்தக தடைகளுக்கு பதிலாகவே எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிப்படுகிறது.
அத்தோடு, அமெரிக்காவின் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதும், அமெரிக்கத் தொழில்களை ஊக்குவிப்பதுமே இந்த புதிய வரிகளை விதிப்பதன் நோக்கம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் குழு
இவ்வாறனாதொரு பின்னணியில், இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகளின் தாக்கத்தையும் விளைவுகளையும் கண்டறியும் வகையில் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்.
இதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தவிசாளர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தவிசாளர், வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் தலைமை பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் உமர், ஷெராட் அமலீன் மற்றும் சைஃப் ஜாஃபர்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
https://www.youtube.com/embed/d2GtLkZSrs0