முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு: அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடா (Canada) மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரி விதிப்பு நடவடிக்கைகளால் மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனேடிய சாஃப்ட்வுட் மரத்தின் மீது கிட்டத்தட்ட இருமடங்கான வரிகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

இது ஒருகட்டத்தில் அமெரிக்காவில் டொய்லெட் பேப்பர் (Toilet Paper) பற்றாக்குறைக்கு தள்ளப்படும் மிக மோசமான சூழலை உருவாக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

ட்ரம்பின் முடிவு

எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் சாஃப்ட்வுட் மரத்தின் மீதான வரியை 27 சதவீதமாக உயர்த்த ட்ரம்ப் உறுதி கொண்டுள்ளார். ஆனால் இது 50 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ட்ரம்பின் இந்த முடிவால் டாய்லெட் பேப்பர் மற்றும் பேப்பர் துண்டுகளை தயாரிக்க பயன்படும் NBSK என்ற மூலப்பொருளின் பற்றாக்குறை ஏற்படும்.

கனடா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு: அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி | Trump S Tariffs On Canada Effected To Americans

கடந்த ஆண்டு மட்டும் 2 மில்லியன் டன் கனேடிய NBSKவை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.

கோவிட் தொற்று காலகட்டத்தின் துவக்கத்தில் மக்கள் அவசர அவசரமாக பொருட்களை மொத்தமாக வாங்கிக் குவித்த அதே நிலை தற்போதும் ஏற்பட வாய்ப்புள்ளதாக  கூறப்படுகின்றது.

உற்பத்தியை கொண்டுவரும் திட்டம்

கடந்த 30 ஆண்டுகளாக NBSK இறக்குமதிக்கு கனடாவையே அமெரிக்கா நம்பியுள்ளது. தற்போது கனடாவில் இருந்து NBSK ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லை என்றால், அமெரிக்க நிறுவனங்கள் பல நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால், ட்ரம்பின் வரி 50 சதவீதத்தை தாண்டினால், பல அமெரிக்க நிறுவனங்கள் மூடப்படும் சூழல் உருவாகும் என்றே கூறப்படுகிறது.

கனடா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு: அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி | Trump S Tariffs On Canada Effected To Americans

நீண்ட காலமாக உற்பத்தியை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கான ஒரு கருவியாகவே ட்ரம்ப் வரிகளை ஊக்குவித்து வருகிறார்.

இதனாலையே கனடாவின் சாஃப்ட்வுட் தங்களுக்கு தேவையில்லை என ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.