ஜேவிபியின் அரசியல்வாதி ஒருவர் மாத்தளை, யட்டவத்தையில் பொதுமகன் ஒருவரை
அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன
இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
காணொளி
யடவத்த உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் டபிள்யூ. ஜி. மஞ்சுள பிரசாத்
சமரவீர உட்பட ஜே.வி.பி உறுப்பினர்கள் குழுவே, அமல் ரத்நாயக்க என்ற
உள்ளூர்வாசியை அவரது வீட்டுக்கு சென்று மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த அச்சுறுத்தல் சுமார் 22 நிமிடங்கள் நீடித்ததாகவும், சம்பவத்தின் காணொளி
பொதுவில் பகிரப்பட்டுள்ளதாகவும் கவிரத்ன தெரிவித்துள்ளார் .
பொதுவில் சமூக ஊடகங்கள் மூலம், குடிமக்களுக்கு சுதந்திரமாக கருத்து தெரிவிக்க
உரிமை உண்டு
இந்தநிலையில், உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சி
நடவடிக்கைகளை அடக்குவதற்கான அரசாங்கக்கட்சியினரின் முயற்சிகளைக் கண்டிப்பதாக
கவிரத்ன தெரிவித்துள்ளார்.