இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபன தலைவரின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நிதியமைச்சரின் செயலாளரிடம் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காப்புறுதிக் கூட்டுத்தாபன மனித வள பிரதி பொதுமுகாமையாளர் திலிண தரங்க ஹிரிபிடிய இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நுசித் குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சில் முறைப்பாடு
இவர் பதவியேற்றது தொடக்கம் காப்புறுதிக் கூட்டுத்தாபன விதிமுறைகளை மீறி, பல்வேறு கட்டளைகளைப் பிறப்பித்து வருவதாக திலிண தரங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு கட்டளையும் எழுத்து மூலமாக வழங்குவதற்குப் பதில் , தனது வாய்மொழி உத்தரவின் பிரகாரம் சட்டவிரோத கட்டளை நிறைவேற்றுமாறு அவர் அழுத்தம் கொடுப்பதாகவும், அதற்கு இசைய மறுப்பதன் காரணமாக தன்னை உடனடியாக பதவி விலகுமாறு நிர்ப்பந்திப்பதாகவும் திலிண தரங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், நிதியமைச்சிடம் இருந்து இது தொடர்பில் இதுவரை எதுவித பதிலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.