முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடு வீதியில் இடைமறிக்கப்பட்ட சிறீதரன் எம்.பி : காவல்துறையின் அடாவடி

இலங்கை தமிழரசுக்கட்சி (Ilankai Tamil Arasu Kachchi) சார்பாக கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் வழிபாடுகளுக்காக சென்ற போது காவல்துறையினருக்கும் குறித்த உறுப்பினர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தலைமையில் இன்று (07.05.2025) நடைபெற்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட உறுப்பினர்கள், கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

வழிபாடுகளுக்காக உறுப்பினர்கள் சென்ற போது காவல்துறையினர் பேரணிகளை நடத்த முடியாது என தெரிவித்ததில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் காவல்துறையினருடன் பேசியதில் நிலைமை சுமூகமானது.

இதையடுத்து தேர்தல் வெற்றி தொடர்பாக சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் “தமிழ்த்தேசிய இருப்புக்காக கிளிநொச்சி மக்கள் மிகப்பெரிய ஆணையை எமக்கு வழங்கியுள்ளனர்.

தூயகரங்களோடு தூய நோக்க சிந்தனையோடு அறத்தின் வழி கெளரவமான அரசியலை எமது மக்களுக்கு வழங்குவோம்.

அபிவிருத்தி பணிகளிலும் நிரந்தரமான அபிவிருத்தி பணிகளை செய்வதற்கும் அதற்குரிய முன்னேற்றத்தை காட்டுவதற்கும் இந்த காலம் பயன்பாடுடையதாக மாறும் என கருதுகிறோம்” என்றார்.

அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளி இணைப்பில் காண்க…

https://www.youtube.com/embed/1kXafdawpBo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.