முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சித்திரவதைக்கு எதிரான அரசியலமைப்பு சட்டப்பாதுகாப்பு: உயர் நீதிமன்றின் முக்கிய தீர்ப்பு

சித்திரவதைக்கு எதிரான அரசியலமைப்புச் சட்டப்பாதுகாப்பை மீண்டும்
வலியுறுத்தும் ஒரு முக்கியத் தீர்ப்பில், 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு
வழங்குமாறு உயர் நீதிமன்றம் கொட்டாவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஆறு பொலிஸ்
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மனிதத் தன்மையற்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும்
பேருந்து நடத்துநர் ஒருவருக்கு இந்த நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பேருந்து நடத்துநர், வீதியில் வைத்து பொலிஸ் அதிகாரிகளால்
பலவந்தமாக முழங்காலிடச் செய்யப்பட்டதாக, சித்திரவதை, அவமதிப்பு மற்றும் அதிகார
துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டில் உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல்
செய்யப்பட்டது.

சித்திரவதைக்கு எதிரான அரசியலமைப்பு சட்டப்பாதுகாப்பு: உயர் நீதிமன்றின் முக்கிய தீர்ப்பு | Constitutional Protection Against Torture

பாதுகாப்பு சட்டம் 

இந்த மனு நீதியரசர் மேனகா விஜேசூரிய தலைமையில் நீதியரசர்கள் யசந்த கோதாகொட
மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கொட்டாவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட ஆறு
பொலிஸ் அதிகாரிகளும் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகளின் இந்தச் செயலின் மூலம் இலங்கையின் அரசியலமைப்பில்
உத்தரவாதமளிக்கப்பட்ட சித்திரவதையிலிருந்து பாதுகாப்பு சட்டம்
மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பில் அறிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்