நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நாடாளுமன்ற உணவகத்தில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி, சிறப்புப் பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(19.12.2025) கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“மாண்புமிகு சபாநாயகரே, நான் உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றேன்.
சிவப்பு அரிசி
சிவப்பு அரிசி மற்றும் கறி மட்டுமே இருந்தது. சாப்பிட வேறு எதுவும் இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

பிற்பகல் 2:30 மணியளவில் உணவகத்தில் உணவு இல்லை என்றும், நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் அனைத்து உறுப்பினர்களுக்கும் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

