அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் மீதான நம்பிக்கை தொடர்பில் பெரும் சர்ச்சைகள் வலுப்பெற்று வரும் நிலையில் சபாநாயகர் அசோக ரன்வலவின் பல்கலைக்கழக கல்வி நிலை அதனை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இந்நிலையில், சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித் தகைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இன்னும் சில நாட்களில் அறிக்கையொன்றை வெளியிடுவார் என ஆளும்தரப்பு சுட்டிக்காட்டி வருகிறது.
எனினும் தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் பகிரங்க அறிவித்தலை விடுத்திருந்நதார்.
இதற்கமைய சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபாநாயகரின் பதவி நிலை தொடர்பிலும், புதிய அரசாங்கத்தின் திட்டமிடல்கள் தொடர்பிலும் எமது லங்காசிறி ஊடகமானது மக்களின் சில நிலைப்பாடுகளை கேட்டறிந்தது.
இவ்வாறு மக்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது…