முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்! சர்ச்சையை கிளப்பிய சஜித் தரப்பால் ஆரம்பமாகும் விசாரணை

ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்துள்ளவர்களின் பட்டிலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுப்பப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 

அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

கைதிகளின் பட்டியல் 

அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்! சர்ச்சையை கிளப்பிய சஜித் தரப்பால் ஆரம்பமாகும் விசாரணை | Controversy Over The Presidential Amnesty Issue

அதன்படி, ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

இத்தகைய நியமங்கள் பின்பற்றப்படுகின்ற நிலையில் தற்போது குறித்தவொரு நபரின் பெயர் குறிப்பிடப்பட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் சம்பந்தமாக நாம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்” என்ஙறார்.

தண்டனைச் சட்டக்கோவை

அநுதாரபுரம் மேல் நீதிமன்றத்தில் எச்.சி 692018 இலக்க வழக்கில் 2025.05.02 ஆம் திகதியன்று தண்டனைச் சட்டக்கோவை 386 பிரிவின் பிரகாரம் அதுல சேனாரத்ன என்பவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நபருக்கு 2025.05.12 ஆம் திகதி வெசாக் தினத்தன்று ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்! சர்ச்சையை கிளப்பிய சஜித் தரப்பால் ஆரம்பமாகும் விசாரணை | Controversy Over The Presidential Amnesty Issue

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் 2025.05.02 சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு 2025.05.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை பாரதூரமான விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தரப்பு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் நீதியமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்