லியோ – கூலி
கடந்த 2023ம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளியான லியோ படம் உலகளவில் ரூ. 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமும் இதுவே ஆகும்.
இந்த நிலையில், லியோ படத்தின் வசூல் சாதனைகளை ஒவ்வொரு இடத்திலும் துவம்சம் செய்து வருகிறது கூலி.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி படம் கடந்த 14ம் தேதி திரையரங்கில் வெளியானது.
இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றத்தை தந்தது. ஆனாலும் கூட வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கூலி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
துவம்சம் செய்யும் கூலி
இந்நிலையில், ஹிந்தியில் ரூ. 42 கோடிக்கும் மேல் வசூல் செய்து, லியோவின் வாழ்நாள் வசூலை முறியடித்துள்ளது. இதே போல், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் லியோ படம் செய்ததை விட அதிக வசூலை செய்து சாதனை படைத்துள்ளது கூலி.