கூலி
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த கூலி திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், மறுபக்கம் கலவையான விமர்சனங்களும் படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
சிலர் கடுமையாகவும் இப்படத்தை விமர்சித்தனர். ஆனால், வசூலில் மாஸ் காட்டி விமர்சனங்களை தூள் தூளாக்கி விட்டது கூலி.
இதுவரை உலகளவில் ரூ. 425 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 112 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என கூறுகின்றனர்.
120 பேருக்கு Food Poison.. முன்னணி நடிகரின் படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
நஷ்டம்
அனைத்து இடங்களிலும் வசூலில் பட்டைய கிளப்பி வரும் கூலி படம், கேரளாவில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கிட்டதட்ட ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை கேரளாவில் நஷ்டம் ஏற்படலாம் என Trade வட்டாரங்கள் கூறுகின்றனர்.