கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகிறது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.


என் தகுதி கடவுளுக்குத் தெரியும்.. சிறகடிக்க ஆசை புகழ் கோமதி ப்ரியா அதிரடி பதிவு
வசூல்
இந்நிலையில், கூலி திரைப்படம் இலங்கை முன்பதிவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கூலி திரைப்படம் இலங்கை முன்பதிவில் ரூ. 4.85 கோடி வசூல் செய்துள்ளது.


