உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் என்கின்ற நாட்டை நீக்குவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு தான் ஈரான்.
அப்படிப்பட்ட ஈரானின் கரங்களுக்கு அணுவாயுதம் சென்றுவிடவே கூடாது என்கின்ற எண்ணத்தில் வியூகம் வகுத்து வருகின்றது இஸ்ரேல்.
இன்றுள்ளது போல ஈரான் பலவீனமாக நிற்கும் மற்றொரு சந்தரப்பம் இஸ்ரேலுக்கு இனி எப்போதுமே கிடைக்காது.
சிரியா, ஹிஸ்புல்லா, ஹமாஸ், ரஷ்யா என்று தனது சிறகுகள் பலவற்றை இழந்து விட்டுள்ள நிலையில் ஈரான், இஸ்ரேலின் வான் தாக்குதல் காரணமாக அதனது வான் பாதுகாப்பு பொறிமுறையும் பலவீனப்பட்டு – கிட்டத்தட்ட நிர்வாணமாக நின்று கொண்டிருப்பதாகவே கூறுகின்றார்கள் இஸ்ரேலிய ஆய்வாளர்கள்.
ஈரான் மீது தாக்குதல் நடாத்துவதற்கு இதனை விட சிறந்த ஒரு தருனம் இஸ்ரேலுக்கு வாய்க்கப்போதேயில்லை என்ற நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சாத்தியம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/UmDMfckw610?start=7