அமெரிக்காவில் (United States) டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.
இந்தநிலையில், டிக் டொக் தடை செய்யப்படக் கூடாது என கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை விதிக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக் டொக்கிற்கு தடை
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் டிக் டொக்கிற்கு தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், டிக் டொக் தடை அமெரிக்காவில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
புதிய ஜனாதிபதி
இந்த தடை குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் (Donald Trump) ஒப்படைப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
டிக் டொக் மீது அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டால் அது சீன – அமெரிக்க உறவுகளை மேலும் பாதிக்கக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டிக் டொக் செயலிக்கு சீனாவுடன் (China) தொடர்பு இருப்பதனால் இந்த செயலி மூலம் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.