முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பல வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிகளை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மேலும் நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் ஐவருக்கு சொந்தமான 97 மில்லியன் ரூபா தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
குறித்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் பரிசீலித்ததற்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 05 ஆயுள் காப்புறுதிக் காப்புறுதிகளை இன்று வரை இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம், எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை இடைநிறுத்த உத்தரவை மேலும் நீடிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.