தேசியப் பட்டியல்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கட்சிகளுக்குள்ளேயே பேசி தீர்த்து, அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை மாத்திரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியல்களை அந்தந்த கட்சிகளின் செயலாளர்களுடன் மட்டுமே கையாளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரச்சினைகள்
அதன்படி, கட்சிகளின் செயலாளர்களால் அனுப்பப்படும் கடிதங்கள் மாத்திரமே ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சில அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தொடர்பில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.