அநாவசியமான முறையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் தேவையின்றி ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றம்
தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக மூன்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வித வன்முறைகளும் இடம்பெறாத நிலையில் தேவையின்றி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைபடுத்தி கலகத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதி பெற்றுக்கொள்ளாது இவ்வாறு ஊரடங்குச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டமை கலகத்தை விளைவிப்பதற்கான முயற்சி என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆளுனர் மஹிந்த தேசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.