கொள்கலன் மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்காட நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற கொள்கலன் மோசடி தொடர்பில் இந்த அதிகாரி மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய சிகப்பு லேபள் இடப்பட்ட கொள்கலன்களை விடுவித்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த குழு, அருக்காட மீதும் குற்றம் சுமத்தியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருக்கொடவிற்கு எதிராக அரசாங்கம் ஒழுக்காற்று நவடடிக்கை எடுக்கத் தவறியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிமயனம் வெளிப்படைத்தன்மையானதா என அவர் கேள்வி எழுப்பியதுடன் இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
கொள்கலன் மோசடி குறித்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

