முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன ரீதியாக செயற்படும் அநுர அரசு.. நீதியரசர் விக்னேஸ்வரன் கடும் காட்டம்

இன ரீதியான சிந்தனையுடனும்
அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று எமது கட்சியின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கியமான மைல்கல்
நாட்டப்பட்டுள்ளது.

கட்சி அலுவலகம் என்பது கட்சிக்கு ஒரு நங்கூரத்தை வழங்குகின்றது. உறுப்பினர்
சேரவும், கலந்துரையாடவும், நிர்வாகச் செயற்பாடுகளைச் செவ்வனே செய்யவும்
கட்சிச் செயலகம் உதவுகின்றது.

எமது செயலகம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

அடுத்து நாம் வரவிருக்கும் தேர்தல்களைப் பற்றியும் நாம் கட்சி சார்பில்
செய்யும் மக்கள் நலம் சார்ந்த செயற்றிட்டங்கள் மற்றும் உபயோகமான கைங்கரியங்கள்
பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

கிழக்கில் எமது கட்சி ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரத்தின் மறைவை அடுத்து
நமது செயற்பாடுகள் ஸ்தம்பித்து உள்ளன.

அரசாங்கத்தின் நிலைப்பாடு 

அவற்றை நாம் விரிவுபடுத்த வேண்டும்.

ஆனால் எமது கட்சி நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அதன் நலன்விரும்பிகள் மற்றும்
உறுப்பினர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும்
நிறுவனங்கள் ஊடாக பிரபலம் தேடாமல் பல்வேறு சமூக, பொருளாதார செயற்பாடுகளை
மேற்கொண்டு வருவதை நான் அறிவேன்.

இன ரீதியாக செயற்படும் அநுர அரசு.. நீதியரசர் விக்னேஸ்வரன் கடும் காட்டம் | Cv Vigneswaran Blames Anura Government

ஏற்கனவே நமது கட்சி ஒரு முக்கியமான அரசியல் ரீதியான ஆங்கில நூலை
வெளியிட்டுள்ளது. பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் அது பற்றி நல்ல கருத்துக்களை,
அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளனர்.

எமது அரசியல் பிரச்சினைகள் பற்றி
உள்நாட்டில் மட்டும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எமது பிரச்சினைகளை உலகறியச்
செய்வது எமது கடமையாகும். அதன் பொருட்டே எமது கட்சி குறித்த ஆங்கில நூலை
வெளியிட்டது.

எமது காணிகள் அரசாங்கத்தாலும் பௌத்த பிக்குகளாலும், இராணுவத்தாலும்
கையகப்படுத்துவது பற்றி சில வருடங்களுக்கு முன் ஒரு சர்வதேச கருத்தரங்கத்தை
நாம் ‘சூம்’ வழியாக நடத்தினோம்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.