கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக சென்றிருந்த சிங்கள திரைப்பட
நடிகை தமயந்தி பொன்சேகாவின் கைப்பையிலிருந்து பணம், வங்கி அட்டைகள் மற்றும்
தேசிய அடையாள அட்டை என்பன திருடப்பட்டுள்ளன.
தமயந்தி பொன்சேகா மருத்துவரை அணுகுவதற்காக சன நெரிசலான மின்தூக்கியில்
பயணித்தபோது, இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
நெரிசலின் மத்தியில், இனந்தெரியாத ஒருவரால் நடிகையின் கைப்பை இரகசியமாக
திறக்கப்பட்டு, அவருக்கு தெரியாமலேயே குறித்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

மாலனி பொன்சேகாவின் சகோதரி
தமயந்தி பொன்சேகா மறைந்த நடிகை மாலனி பொன்சேகாவின் சகோதரியும் பிரபல திரைப்பட
இயக்குநர் பிரசன்ன விதானகேயின் மனைவியும் ஆவார்.

