முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாமலின் உயிருக்கு ஆபத்தாகும் அரசாங்கத்தின் திட்டம்..!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை போதைப்பொருள் தொடர்பான குற்றத்துடன் இணைத்து அவரது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வேலைகளை அரசாங்கம் செய்வதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

‘நாமல் ராஜபக்சவை போதைப்பொருள் தொடர்பான குற்றத்துடன் இணைப்பது, மிகவும் ஆபத்தான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் கூறுகிறோம்.

அர்ச்சுனாவின் கருத்து 

அதிக சிக்கல் நிலவிய கோவிட் காலத்தில் சிவப்பு லேபள் கொண்ட ஒரு கொள்கலன் கூட சுங்கத்திலிருந்து சோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்படவில்லை.

எனினும், 323 கொள்கலன்கள் சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுவது மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான குற்றச்சாட்டாகும்.

நாமலின் உயிருக்கு ஆபத்தாகும் அரசாங்கத்தின் திட்டம்..! | Danger To Namal S Life Sagara Kariyawasam

இந்தக் கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கைக்கு கொண்டு வர முடியாத ஆயுதங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையில் வைத்து தெரிவித்திருந்தார்.

இது தவிர, இந்தக் கொள்கலன்களில் போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் இருந்ததாகவும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

மறைக்கப்படும் தகவல்

இது தொடர்பாக நாங்கள் முறைப்பாடு அளித்துள்ளோம். ஆனால் இன்று வரை எந்த பதிலும் இல்லை.

ஆனால் நேற்று முன்தினம் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான மூலப்பொருட்களைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் ஒரு கொள்கலன் தொடர்பாக பொலிஸார் விரைந்து தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர்.

நாமலின் உயிருக்கு ஆபத்தாகும் அரசாங்கத்தின் திட்டம்..! | Danger To Namal S Life Sagara Kariyawasam

இந்தக் கொள்கலன் குறித்த 323 கொள்கலன்களுக்குள் அடங்கவில்லை. அவர்கள் அதைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள்.

ஆனால், அந்தத் தகவல் நாட்டிற்கு வெளிப்படுத்தப்படாமல் மறைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.