Robinhood
தெலுங்கு சினிமாவில் நிதின், ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராபின் ஹுட்.
இப்படம் வரும் மார்ச் 28ம் தேதி படு மாஸாக வெளியாக இருக்கிறது, புரொமோஷன் வேலைகளும் சூடு பிடிக்க நடக்கிறது.
இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி இருந்தது.
பல இளம் பெண்கள் பாவாடையை இழுத்துவிட்டும் மல்லிகைப்பூவை வைத்து மேலாடையை உருவாக்கியும் ரீல்ஸ் பறக்கவிட்டு வருகிறார்கள்.

சம்பளம்
இந்த நிலையில் ராபின்ஹுட் படத்தில் ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வில்லனாக நடித்திருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன.
இதில் வில்லனாக நடிக்க டேவிட்டிற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள ஸ்ரீலிலாவிற்கே இத்தனை கோடி சம்பளம் இருக்காதே என கமெண்டுகள் பறக்கின்றன.


