முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தாவூதி போஹ்ரா சமூகத்தின் மாநாடு பாகிஸ்தானுக்கு மாற்றம் : நூற்றுக்கணக்கானோரின் இலங்கை பயணம் இரத்து

Courtesy: Sivaa Mayuri

பல நாடுகளில் இருந்து பெருமளவானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட தாவூதி போஹ்ரா (Bohra) சமூகத்தின் ஆன்மீக மாநாடான ஆசாரா முபாரகா (Ashara Mubaraka) இலங்கையிலிருந்து பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக கொழும்பில் இந்த நிகழ்வு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

எனினும் காரணம் கூறப்படாமல், தாவூதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான சையத்னா முஃபத்தால் சைஃபுதீனின் பயணம் பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டமையால்,  நிகழ்வும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரலை மூலம் நிகழ்வுகள்

இதனையடுத்து இலங்கைக்கு வரவிருந்த பலர் கொழும்புக்கான பயணத்தை இரத்து செய்துள்ளனர்.

இருப்பினும் இலங்கையில் உள்ள போஹ்ரா சமூகத்தினர் பாகிஸ்தானுடன் நேரலை மூலம் நிகழ்வை இணைந்து நடத்த தயாராகி வருகின்றனர்.

dawoodi-bohra-conference-shifted-to-pakistan

இந்தநிலையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இது குறித்து கருத்துரைத்துள்ளார்.

நிகழ்வின் மாற்றம் குறித்த செய்திகள் வந்தவுடன், சில முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டன.

விசா பிரச்சினைகள்

எவ்வாறாயினும், பாகிஸ்தானுக்கு பயணிக்கும் போது விசா பிரச்சினைகள் உள்ளன என்ற அடிப்படையில் சிலர் கொழும்புக்கு வரலாம் என்று எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

dawoodi-bohra-conference-shifted-to-pakistan

கடந்த ஜூலை 6ஆம் திகதி முதல் 10 நாட்கள் இந்த  நிகழ்வு  நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வு கலாசார பரிமாற்றம் மற்றும் ஆன்மீக செறிவூட்டலை வளர்ப்பது மட்டுமன்றி, இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் என்று இலங்கை சுற்றுலாத்துறை முன்னர் எதிர்பார்த்தது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்