முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிலங்கா காவல்துறையில் அரைவாசி பேர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்களில் அரைவாசிப் பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்க வைத்தியசாலைகளில் விடுதி வளாகங்களை ஒதுக்கீடு செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதிகப்படியான குடிப்பழக்கம், உணவு கட்டுப்பாடு இன்மை மற்றும் சரியான உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் காவல்துறை உத்தியோகத்தர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பலர் தொற்றாத நோய்களால் பாதிப்பு

காவல்துறை அதிகாரிகளின் உடல்நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, சுமார் 45% காவல்துறை அதிகாரிகள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

சிறிலங்கா காவல்துறையில் அரைவாசி பேர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Half Of The Police Are Sick

கடந்த காலங்களில் பெரும்பாலான காவல்துறையினர் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், தற்போது விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும் அதிகாரிகள் குறைவு. பல அதிகாரிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நோய்வாய்ப்பாட்டுள்ளார்களா என அறியாத காவல்துறையினர்

“காவல்துறை அதிகாரிகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்க உணவு மெனு தயாரித்து காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டாலும் அது சரியாக செயற்படுத்தப்படவில்லை. பல அதிகாரிகள் துரித உணவுகளை உண்கின்றனர். அது அவர்களை நோயுறச் செய்கிறது.

சிறிலங்கா காவல்துறையில் அரைவாசி பேர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Half Of The Police Are Sick

ஒரு மாதத்தில் சராசரியாக 17 காவலர்கள் பணியில் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 23 அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 30% முதல் 35% வரையிலான காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளார்களா என்று இன்னும் தெரியவில்லை.

நோய்வாய்ப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.