ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு (Dayasiri Jayasekara) இனி எந்த ஒரு கட்டத்திலும் சுதந்திரக் கட்சியில் இணைய இடமளிக்கப்படாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகரவை மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இணைத்து அவருக்கு முக்கியமான பதவியொன்றை வழங்க ஒருசிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
கட்சியுடன் இணைவு
எனினும் கட்சியின் தற்போதைய தலைவரான நிமல் சிரிபால டி சில்வா மற்றும் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் அதனை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
அதன் காரணமாகவே இனி வரும் காலங்களில் எந்த ஒரு கட்டத்திலும் தயாசிறி ஜயசேகரவை சுதந்திரக்கட்சிக்குள் உள்வாங்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தயாசிறி ஜயசேகரவும் இனிவரும் காலங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தனது அரசியலை தொடர்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.