ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தொடர்பில் நான் கூறிய கருத்திற்கு மன்னிப்பு கோருகின்றேன். நான் வேறு ஒரு காரணத்திற்க்காகத் தான் அவ்வாறு கூறியிருந்தேன்.
இதயமுள்ள மனிதன்
நான் மாற்றுத்திறனாளிகளை ஏளனப்படுத்தும் விதமாக பேசி விட்டதாக சமூக ஊடகங்களிலும் என்னை விமர்சித்திருந்தனர்.
விசேட தேவை உடையோரை விமர்சிக்கும் எண்ணம் எனக்கில்லை. நான் ஒரு இதயமுள்ள மனிதன். விசேட தேவை உடையோரை தவிர்த்து விட்டு நான் நாட்டின் தீர்மானங்களை பற்றி கதைக்க மாட்டேன்.
அது மட்டுமன்றி சுகத் வசந்த டி சில்வா பல்கலைக்கழகத்தில் என்னுடன் படித்தவர். அவர் எனது பாடல்களையும் ரசித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.