ஈரானில் (Iran) நோபல் பரிசு பெற்ற பெண்ணொருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர் நர்கெஸ் முகமதி எனபவருக்கே இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இவர் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.
கொலை மிரட்டல்
இதற்காக பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இதனையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பெண்களுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருவதால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

