இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,003 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த பேரிடரால் 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் 14 இலட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
மலாக்கா ஜலசந்தி
மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட சென்யார் என்ற சூறாவளியால் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,003 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 218 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 200-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் 581 கல்வி நிலையங்கள் வெள்ள பாதிப்புகளால் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

