முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புலமைப்பரிசில் பரீட்சை – உயர்தர பரீட்சை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்கள பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (05) இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது நாளை (06), நாளை மறுதினம் மற்றும் 8 ஆம் திகதிகளில் மழைக்காலநிலை நிலவினால், பரீட்சைப் பணிகளுக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயற்பாட்டு அறையில் விசேட பிரிவொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

இதேவேளை, வெள்ளப்பெருக்கு ஏற்படுமாயின் அதற்காகப் படகுகள் மற்றும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Decision Of Gce A Level Exam Gr 5 Scholarship Exam

கடந்த ஆண்டும் உயர்தரப் பரீட்சை நடைபெற்ற நவம்பர் மாதத்தில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அசௌகரியத்திற்கு உள்ளான உயர்தர மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/decision-of-gce-a-level-exam-gr-5-scholarship-exam-1785922109

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.