முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு (Johnston Fernando) எதிராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தாக்கல் செய்த வழக்கொன்றினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து காரணமாக தனக்கு ஏற்பட்ட நற்பெயருக்கு களங்கம் இழைக்கப்பட்டதால் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி அநுர குமார திசாநாயக்க வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது அநுர குமார திசாநாயக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
அதன்படி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் பதிவு செய்யப்படாத காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் (Johnston Fernando) பதிவு செய்யப்படாத BMW ரக கார் இங்கிலாந்தில் (England) திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.