முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எம்.பிக்களுக்கான சலுகைகள் குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானம் : வெளியான அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் குறித்து எதிர்வரும் வாரமளவில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு சேவையில் இருந்து இராணுத்தினர் மீளழைக்கப்பட்டு காவல்துறையினர் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசியல் பழிவாங்கலுக்காக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது.

மீளழைக்கப்பட்ட இராணுவத்தினர்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பாதுகாப்பு பணியில் இருந்த இராணுவத்தினர் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளனர்.

எம்.பிக்களுக்கான சலுகைகள் குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானம் : வெளியான அறிவிப்பு | Decision To Be Taken Regarding Benefits For Mps

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் முறையான காரணிகளை குறிப்பிட வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் குறித்து எதிர்வரும் வாரமளவில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆறு மாத காலத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலனை செய்யப்படும். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு போதுமான அளவில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆனந்த விஜேபால அறிவிப்பு 

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைளை மறுபரிசீலனை செய்வதற்கு நீதியரசர் கே.டி. சித்திரசிறி தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டது.

எம்.பிக்களுக்கான சலுகைகள் குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானம் : வெளியான அறிவிப்பு | Decision To Be Taken Regarding Benefits For Mps

இந்த குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) அண்மையில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

நீதியரசர் (ஓய்வுநிலை) சித்திரசிறி குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) கடந்த 17 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கான இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1448 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.