பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று தீபக் எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் எலிமினேட் ஆவர் என யாரும் எதிர்பார்க்காத நிலையில் பலரும் அதிர்ச்சி ஆனார்கள்.
குறிப்பாக முத்துக்குமரன் தான் கதறி கதறி அழுது புலம்பினார். அவர் பைனல் வரை வந்திருக்க வேண்டும் என கூறி அவர் அழுதார்.
அவரை சமாதானப்படுத்திவிட்டு தான் தீபக் வெளியில் கிளம்பினார். தீபக் எல்லோர் முன்பு பேசும்போது என் மகன் அப்போவே சொல்லிட்டு போனார். இனிமேல் நீங்கள் எவ்வளவு நாள் இருந்தாலும் அது போனஸ் தான் என அவன் கூறும்போது எனக்கு புரிந்தது என கூறினார்.
கிரீடம் கொடுத்த பிக் பாஸ்
வழக்கமாக எலிமினேட் ஆனவர்கள் எல்லோரையும் trophyயை கல் மீது உடைத்துவிட்டு கிளம்பும்படி பிக் பாஸ் கூறுவார். ஆனால் தீபக் அப்படி செய்தபிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்.
இதுவரை நடந்த சீசன்கள் அனைத்திலும் நீங்கள் தான் சிறந்த கேப்டன் என சொல்லி பிக் பாஸ் அவருக்கு பட்டம் கொடுத்து கிரீடம் அணிவிக்க சொன்னார் பிக் பாஸ்.
அதை பெற்றுக்கொண்டு மிகவும் எமோஷ்னலாக தீபக் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பினார்.