பிக் பாஸ் 9
செப்டம்பர் மாதம் வந்துவிட்டாலே பிக் பாஸ் குறித்த பேச்சு எங்கு திரும்பினாலும் இருக்கும். எப்போது ஆரம்பம், யார்யாரெல்லாம் பங்குகொள்ள போகிறார்கள், அவர்களுடைய சம்பளம் என்ன என்பது குறித்து பேசப்படும்.

ஹிந்தியில் கடந்த வாரம் பிக் பாஸ் 19 துவங்கிய நிலையில், தமிழில் வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் பிக் பாஸ் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ விரைவில் வெளிவரும். கடந்த பிக் பாஸ் 8-ஐ தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 9-யையும் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்குகிறார்.
கடந்த சில வாரங்களாக இந்த பிக் பாஸ் 9ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது. ஷபானா, உமைர், ஃபரினா, வினோத் பாபு, நேஹா உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் அடிபடுகிறது.

அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா
சிவரஞ்சனி
கடந்த 8வது சீசனில் கலந்துகொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் தீபக். இவருடைய மனைவி சிவரஞ்சனி பிக் பாஸ் 9ல் போட்டியாளராக வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தனது கணவர் தீபக்கை பார்க்க பிக் பாஸ் 8 வீட்டிற்குள் வந்தபோதே, செம Fun-ஆக இருந்தது. அப்போதே பலரும் இவர் சீசன் 9ல் வர தகுதியானவர் என கூறினார்கள்.

லக்ஷமி பிரியா
மேலும் மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை லக்ஷமி பிரியாவும் போட்டியாளராக வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எந்த அளவிற்கு இந்த தகவல் உண்மை என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் யார்யாரெல்லாம் உறுதியாக உள்ளே சொல்லப்போகிறார்கள் என்று.


