ஸ்பிரிட்
இந்தியளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் இயக்கத்தில் கடைசியாக அனிமல் படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியைந்தது.
அடுத்ததாக ஸ்பிரிட் எனும் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளிவந்தது.


6 நாட்களில் மாமன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதற்கு தயாரிப்பாளர் சரி என கூறியதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

ரிஜெக்ட் செய்த இயக்குநர்
இப்படியிருக்க தற்போது இப்படத்திலிருந்து தீபிகா படுகோன் ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

தீபிகா படுகோனின் ஒர்க்கிங் ஸ்டைல் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிற்கு பிடிக்கவில்லை என்பதால், அவரை படத்திலிருந்து ரிஜெக்ட் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

