யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) 39ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
வெகு விமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறந்த கல்வித் தகைமையுடை மாணவர்கள் பெரிதும் கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிக்கப்பட்ட மாணவர்களின் பின்னணியை நோக்கும் போது அதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் பாராட்டத்தக்க கூடிய மாணவர்களின் வகிபங்கு என்பது பேசப்படக்கூடிய விடயமாக மாறியுள்ளது.
இந்தநிலையில், தமிழர் பிரதேச மக்களை பொறுத்த வரையில், யுத்த காலத்தில் கல்வி என்பது கேள்விக்குட்படுத்தப்பட்ட விடயமாக காணப்பட்டது.
இவ்வாறு யுத்தத்தால் பாதிக்கப்பட்டமையால் தமது கல்வியில் எதிர்பார்த்த தனது இலட்சியத்தை அடைய முடியாமல் தனது 27 ஆவது வயதில் உயர்தர பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.
பல்கலைக்கழகத்திலே சிறந்த கல்வித் தகைமையை பெற்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதியொருவர் தனது இலட்சியத்தை அடைந்துள்ளார்.
குறித்த யுவதியின் பயணம், கல்விக்கான உந்துதல், எதிர்நோக்கிய பிரச்சினை மற்றும் இலட்சியத்திற்கு வழியமைத்த பாதைகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய சொல்லாயுதம் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/or0MQl6zjMI