வன்னி மாவட்டத்தில் ஜனநாயக இடதுசாரி
முன்னணி இன்றையதினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (9) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல்
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல்
மாவட்டத்தில் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் ஜனநாயக
இடதுசாரி முன்னணி ஆகிய இருகட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன.
வேட்புமனுத் தாக்கலின் போது, வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.