அருள்நிதியின் டிமான்டி காலனி 2
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. குறிப்பாக திரில்லர் ஜெனரில் இவர் தான் கிங் என்று சொல்லவேண்டும்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் டிமான்டி காலனி 2. 2015ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த டிமான்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக டிமான்டி காலனி 2 உருவாகியுள்ளது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருள்நிதி உடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்த இப்படத்தின் வசூல் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.

இதுவரை ப்ரீ புக்கிங்கில் கோட் படம் செய்துள்ள கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா
வசூல் விவரம்
இந்த நிலையில், இதுவரை டிமான்டி காலனி 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் மட்டுமே ரூ. 55 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியை காட்டுகிறது.
55+ Crore and counting! 🎉 #Demontecolony2 is taking the box office by storm ⚡️🔥🔥@BTGUniversal @RedGiantMovies_ @arulnithitamil @bbobby @ManojBeno @AjayGnanamuthu @priya_Bshankar @SamCSmusic @proyuvraaj @thinkmusicindia pic.twitter.com/CvNk0mY1iM
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) August 29, 2024
மேலும் அடுத்ததாக டிமான்டி காலனி 3 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

