நேற்றைய தினம், முன்னாள் அமைச்சர், பாட்டாலி சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்த கருத்து பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமே முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கைதை தடுத்திருக்கின்றது என அவர் கூறியிருந்தார்.
அத்துடன், தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படாமைக்கு முழுமையான காரணம் டிரான் அலஸ், என்று சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் பேசப்படுவது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் தெரியும், இருப்பினும் அவர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார் என ரணவக்க தெரிவித்துள்ளார்.
டிரான் அலஸ் எந்தவொரு மோசடி செய்தாலும் கூட அநுர குமார திஸாநாயக்க அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் என்கின்றார், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,