விஷால்
நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக இவர் நடித்த மதகஜராஜா படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தது.
பிஸியாக படங்கள் நடித்து கொண்டிருந்த விஷால் சில தினங்களுக்கு முன் நடிகை தன்சிகாவை வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார்.


அந்த படத்தை தெரியாமல் பார்த்துவிட்டேன், தூங்கவே முடியவில்லை.. மணிகண்டன் ஓபன் டாக்
காரணம் தெரியுமா?
இந்நிலையில் திருமண பணிகள் ஒரு பக்கம் நடக்க, நடிகை சாய் தன்ஷிகா படத்தின் படப்பிடிப்புக்காக அந்தமான் செல்ல இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகளில் நடக்க இருக்கிறது. படத்தை முடித்துவிட்டால், அடுத்து திருமண வேலையில் கவனம் செலுத்துவதற்காக இப்போதே படப்பிடிப்பை விரைவு படுத்தி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


