நடிகர் அபிநய்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.
கடைசியாக சந்தானம் நடித்திருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வரும் நடிகர் அபிநய் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.
எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் அப்பாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படம் இதோ
தனுஷ் உதவி
இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபிநய்க்கு உதவும் வகையில் KPY நடிகர் பாலா ரூ. 1 லட்சம் பணம் கொடுத்திருந்தார். அந்த வீடியோ வெளிவந்து வைரலானது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தற்போது ரூ. 5 லட்சம் கொடுத்து மருத்துவ செலவுக்கு உதவியுள்ளார். துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் – அபிநய் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.