நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும், பிரபல இயக்குநராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.
தமிழ்நாட்டில் 4 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தனுஷே தயாரித்துள்ளார். மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதோ அந்த ட்ரைலர் :
காதல் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற 21ம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட இளைஞர்கள் பட்டாளம் ஒரு பக்கம் நடித்திருக்க, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் என அனுபவமிக்க நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பிரியங்கா மோகன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.