தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ராயன் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை தனுஷ் இயக்கியும் இருந்தார்.
இதனை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் வெளிவரவுள்ளது. மேலும் இட்லி கடை எனும் படத்தையும் இயக்கி வருகிறார். இயக்கத்தை தாண்டி தனுஷ் ஹீரோவாக மட்டும் நடித்து வரும் படம் குபேரா.


வசூலை வாரி குவிக்கும் சென்சேஷனல் புஷ்பா 2.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகளா
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குபேரா பட்ஜெட்
இந்த நிலையில், குபேரா படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. தனுஷின் திரை வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம் இதுவே ஆகும் என கூறுகின்றனர்.


