நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகு இறுதியாக பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
சமீபத்தில் ட்ரெய்லர் உடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால் அதன் காரணமாக தனுஷின் படத்திற்கு தான் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தனுஷ் பட ரிலீஸில் மாற்றம்
தனுஷ் இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது அஜித் படம் வருவதால் அதன் ரிலீஸ் தற்போது மாற்றப்பட்டு இருக்கிறது.
ஒரு வாரத்திற்கு முன்பே ஜனவரி 31ம் தேதி அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்து அதற்கான பணிகள் நடந்து வருகிறதாம்.