வெளிநாட்டில் வாழுகின்ற தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக தமது
ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம்(jaffna)
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா(bavannandarajah) ஆகியோர் வெளிநாட்டு விவகார
அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) உடன் கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம்(08)
நாடாளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர்.
வடக்கில் அமைக்கப்படவுள்ள தொழிற்பேட்டைகள்
இதன்போது வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக
காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள்
முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள்
செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் பதிலளித்தார்.
அதே போன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாது இருக்கும்
தமிழர்கள் தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பான ஆர்வத்தை நாடாளுமன்ற
உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.